பா.ஜனதாவின் போலி தொழிற்சாலையை அம்பலப்படுத்துவோம்-கர்நாடக காங்கிரஸ் சவால்

Update: 2023-08-08 18:45 GMT

பெங்களூரு:-

கர்நாடக வேளாண் துறை மந்திரி செலுவராயசாமி அரசு நீர்ப்பாசன திட்டத்தில் கமிஷன் கேட்பதாக கூறி வேளாண் துறை அதிகாரிகள் எழுதியதாக கவர்னருக்கு புகார் கடிதம் சென்றுள்ளது. இதுகுறித்து விசாரிக்க கவர்னர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த புகார் கடிதத்தின் உண்மை தன்மையை கண்டறிய கர்நாடக அரசும் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

போலி பென்டிரைவ், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.ஆர்.பட்டீலின் பெயரில் வெளியான ேபாலி கடிதத்தை தொடர்ந்து தற்போது அதிகாரிகள் பெயரில் மந்திரிக்கு எதிரான போலி புகார் கடிதம். மந்திரி மீதான புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள அதிகாரிகள் யாரும் மண்டியாவில் இல்லை. இந்த கடிதம் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த போலி கடிதம் குறித்து கர்நாடக அரசு தீவிரமாக விசாரிக்கும். இதன் பின்னணியில் பா.ஜனதாவின் போலி தொழிற்சாலை மற்றும் போலி பென் டிரைவர் திருடரை (அரசின் முறைகேடு தொடர்பான ஆவணங்கள் பென்டிரைவில் இருப்பதாக குமாரசாமி கூறி வருவதால் அவரை மறைமுகமாக) அம்பலப்படுத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்