தென்னிந்திய எம்.பி.,க்களுடன் உணவருந்திய பிரதமர் மோடி!

தமிழ்நாடு, கர்நாடகா உள்பட தென்மாநிலங்களைச் சேர்ந்த 48 எம்பிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-08-03 13:11 GMT

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற போகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ளதால் ஆளும் கட்சியான பாஜக தனது கூட்டணி கட்சியை பலப்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு பாஜகவை எதிர்க்க இந்த முடிவு செய்துள்ளன.

இதனிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து அவ்வப்போது ஆலோசித்து வருகிறது. பிரச்சாரங்கள், வெற்றிக்கான வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்து வருகிறது.

இத்தகைய சூழலில் தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 48 எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

நேற்று மாலை, தென்னிந்தியாவைச் சேர்ந்த என்.டி.ஏ. எம்.பி.க்களுடன் நான் ஒரு அற்புதமான சந்திப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து பனியாரம், அப்பம், வெஜிடபிள் கோர்மா, புளியோதரை, பப்பு சாறு, அடை அவியல் மற்றும் பல தென்னிந்திய உணவுகள் பரிமாறப்பட்டது என பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி அருகே ஜி.கே.வாசன், தம்பிதுரையோடு புளியோதரை பனியாரம், சாப்பிட்ட புகைப்படம் வைரலாகி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்