கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி படுகாயம்; ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

சென்னகிரி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-08-02 15:20 GMT

சிக்கமகளூரு;

தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா ஒசபரஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். அவரது மனைவி வினிதா. இந்த நிலையில் வினிதா வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். அவருக்கு நாகராஜ் உதவி செய்து கொண்டிருந்தார்.

அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் திடீரென கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் நாகராஜ் மற்றும் வினிதா ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்கள். மேலும் வீட்டிலும் தீப்பிடித்து எரிந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து சென்னகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்