கேரளா புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் அமோக வெற்றி

கேரளா புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

Update: 2023-09-08 07:54 GMT

புதுடெல்லி,

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், 7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கேரளா புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 10 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் அமோக வெற்றி பெற்றார்.

மறைந்த முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் மகனான சாண்டி உம்மன் 78,098 வாக்குகள் பெற்று 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். 41,644 வாக்குகளுடன் சி.பி.எம். கட்சி 2-ம் இடமும், பாஜக 6,447 வாக்குகளுடன் 3-ம் இடமும் பிடித்தன. தொடர்ந்து 50 ஆண்டுகளாக காங்கிரஸ் வசமிருந்த இந்த தொகுதியை மீண்டும் அக்கட்சி தக்க வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்