'நீட்' தேர்வு முறைகேடுகளை கண்டித்து கேரள சட்டசபையில் தீர்மானம்

மாணவர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்று கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-06-26 19:33 GMT

கோப்புப்படம்

திருவனந்தபுரம்,

மருத்துவ படிப்புகளுக்கான (இளங்கலை மற்றும் முதுகலை) நீட் நுழைவு தேர்வை அகில இந்திய அளவில் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்து வெளியான நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக கேரள உயர் கல்வித்துறை மந்திரி ஆர்.பிந்து கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் நடைபெற்ற விவாதத்தின்போது, தேசிய தேர்வு முகமையின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாக ஆளும், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்