குளு குளு காஷ்மீர் பனியில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய மத்திய மந்திரி..!

கடும் பனிப்பொழிவு நிலவும் குல்மார்க் நகரில் வருகிற 14ம் தேதி வரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

Update: 2023-02-10 09:47 GMT

ஜம்மு காஷ்மீர்,

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் காஷ்மீரில் இன்று தொடங்குகிறது. கடும் பனிப்பொழிவு நிலவும் குல்மார்க் நகரில் வருகிற 14ம் தேதி வரை இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 600 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக போட்டிகளை முன்னிட்டு, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் கொட்டும் பனியில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்