கர்நாடகா: மத்திய மந்திரி அமித்ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு செய்யகோரி காங்கிரஸ் புகார்..!

மத்திய மந்திரி அமித்ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு செய்யகோரி காங்கிரஸ் கட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

Update: 2023-04-27 05:59 GMT

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு செய்யகோரி பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்கள் டிகே.சிவக்குமார், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் பாஜகவினர் கர்நாடகாவில் சாதி மத மோதலை தூண்டும் விதமாக பேசி மாநிலத்தின் அமைதியை குலைக்கின்றனர் என்றும் பாஜகவினர் எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்துவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்