மடாதிபதி மீது பாலியல் வழக்கு: மாணவிகளுக்கு ஆதரவாக கர்நாடக மடம் வழங்கிய விருதை திருப்பி அளித்த பத்திரிகையாளர்!

மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத்துக்கு 2017ஆம் ஆண்டுக்கான பசவஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Update: 2022-09-03 04:00 GMT

பெங்களூரு,

மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத் கர்நாடக முருக மடம் வழங்கிய பசவஸ்ரீ விருதை திருப்பி தருவதாக அறிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத்துக்கு 2017ஆம் ஆண்டுக்கான பசவஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.ராமன் மகசேசே விருது பெற்ற பி. சாய்நாத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

பசவஸ்ரீ விருது ரூ.5 லட்சம் மதிப்புடையது. ரொக்கம், சான்றிதழ் மற்றும் விருதுப் பலகை ஆகியவை அடங்கும். பரிசளிப்பு விழா அக்டோபர் 23ஆம் தேதி மடத்தின் வளாகத்தில் உள்ள அனுபவ மண்டபத்தில் நடைபெற்றது. பத்திரிகைத் துறையில் சாய்நாத்தின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டது.

சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு. பாலியல் புகாரில் சிக்கிய இவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து  மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் ரூரல் இந்தியாவின் மக்கள் காப்பகத்தின் நிறுவனர்-எடிட்டர் பி.சாய்நாத் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:-

சித்ரதுர்கா ஸ்ரீ முருக மடத்தின் மடாதிபதி ஸ்ரீ சிவமூர்த்தி முருகா சாரணன் குறித்து ஊடகங்களில் வெளியாகும் குற்றச்சாட்டுகளால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

அவர் இப்போது போக்சோ மற்றும் பிற சட்டங்காளின் கீழ் குழந்தைகளை, குறிப்பாக உயர்நிலைப் பள்ளிப் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். குழந்தைகளுக்கு எதிரான எந்த வகையான குற்றங்களையும் கண்டிக்க வார்த்தைகள் இல்லை.

2017-ம் ஆண்டு எனக்கு பசவஸ்ரீ விருதையும், அதில் வந்த ரூ.5 லட்சத்தையும் மடம் கொடுத்தது. இந்நிலையில், அந்த பரிசுத் தொகையை காசோலை மூலம் திருப்பித் தருகிறேன்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும், நீதிக்கான காரணத்திற்காகவும், பசவஸ்ரீ விருதைத் திருப்பித் தருகிறேன்.

இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட மோசமான சம்பவங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ள மைசூரைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் "ஓடாநாடி" மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

சமூக தீமைகளுக்கு எதிரான அவர்களின் பல தசாப்த கால போராட்டம், அவர்களின் விடாமுயற்சியால் விசாரணையை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பான விசாரணையை கர்நாடக அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும், எக்காரணம் கொண்டும் சமரசம் செய்து கொள்ள அரசு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்