அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் பெங்களூருவில் 13 மில்லி மீட்டர் மழை பதிவு

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளது. பெங்களூருவில் 13 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Update: 2022-08-29 16:06 GMT

பெங்களூரு: பெங்களூருவில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி 4 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. மழையால் நகரில் போக்குவரத்து நெரில் உண்டானது. மழையின் தீவிரம் சற்று குறைவாக இருந்ததால் பெரிதாக பாதிப்புகள் ஏற்படவில்லை.

இந்த நிலையில் பெங்களூருவில் இன்று 13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் 7 மில்லி மீட்டரும், எச்.ஏ.எல். விமான நிலைய பகுதியில் 3.7 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. இந்த நிலையில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், பெங்களூருவில் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்