தேசம் பற்றிய உணர்வை குடும்பத்தில் எழ செய்வது நாட்டை வலிமை அடைய செய்யும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு

சமூகத்தில் சாதி வெறி, சமத்துவமின்மை மற்றும் தீண்டாமையை ஒழிக்க பணியாற்ற வேண்டும் என தொண்டர்களிடம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கேட்டு கொண்டார்.;

Update:2023-02-20 12:48 IST


பரேலி,


உத்தர பிரதேசத்தின் பரேலி நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பிலான கூட்டம் நடந்தது. இதில், அந்த அமைப்பின் தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, வேற்றுமைகளை களைய வேண்டியது சங்கத்தின் பொறுப்புணர்வு ஆகும். அனைத்து தீங்குகளில் இருந்தும் விடுபட்ட ஒரு சமூக சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.

சமூகத்தில் இருந்து சாதி வெறி, சமத்துவமின்மை மற்றும் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். சமூக ஆணவம் மற்றும் தாழ்வு மனப்பான்மை ஆகிய இரண்டுக்கும் முடிவு கட்ட வேண்டும்.

சமூக இணைப்புக்கான பணியை நாம் மேற்கொள்ள வேண்டும் என தொண்டர்களிடம் அவர் கேட்டு கொண்டார். கடந்த ஒரு நூற்றாண்டாக சங்கம் நிறைய விரிவடைந்து விட்டது என்றும், இந்த அமைப்பை நாட்டு மக்கள் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாக பார்க்கின்றனர்.

பொதுமக்கள் தங்களது சொந்த பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துடன் இணைந்தபடியே முன்னேற விரும்புகின்றனர். சமூகத்தின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார பிரிவாக குடும்பம் உள்ளது. குடும்பங்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பு, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தி சமூகம் மற்றும் நாட்டை வலிமையாக்க சங்கம் முயற்சித்து வருகிறது.

இதற்காக குடும்ப புரொபோதன் திட்டங்களை நடத்தி வருகிறது. இந்திய குடும்ப முறையே உலகில் சிறந்தது. ஒற்றுமை மற்றும் தேசியவாதம் பற்றிய உணர்வு குடும்பங்களில் விழித்தெழ செய்யப்படும்போது, நாடு வலிமை அடையும் என்று அவர் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்