2026-ல் இந்து நாடாக இந்தியா அறிவிக்கப்படும்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு

பா.ஜ.க.வில் இருந்து சஸ்பெண்டான எம்.எல்.ஏ. ராஜா சிங், 2026-ல் இந்து நாடாக இந்தியா அறிவிக்கப்படும் என பேசியுள்ளார்.

Update: 2023-03-14 12:39 GMT



புனே,


மராட்டியத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் ரஹடா பகுதியில் இந்துத்துவா அமைப்புகள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஐதராபாத்தின் கோஷாமஹால் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜா சிங் என்பவர் கலந்து கொண்டு பேசினார்.

கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, அகமதுநகர் மற்றும் ஐதராபாத் (தெலுங்கானா தலைநகரம்) பெயர்கள் முறையே அஹில்யாபாய்நகர் மற்றும் பாக்யாநகர் என பெயர் மாற்றம் செய்யப்படும் என கூறினார்.

வருகிற 2026-ம் ஆண்டுக்குள் இந்தியா, அகண்ட இந்து நாடு என அறிவிக்கப்படும். இதனை இந்துக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் உள்ளபோது, 150-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ நாடுகள் உள்ளபோது, 100 கோடி மக்களில் பெரும்பான்மையினராக இந்துக்கள் உள்ள இந்தியாவை ஏன் இந்து நாடாக அறிவிக்க முடியாது?

அதனால், எது வந்தபோதும் 2025 மற்றும் 2026-ம் ஆண்டுக்குள் இந்தியா, அகண்ட இந்து நாடு என அறிவிக்கப்படும். இதனை நான் கூறவில்லை. அனைத்து சாதுக்கள் மற்றும் சாமியார்களின் முழக்கம் இதுவே. இது அவர்களது கணிப்பு ஆகும் என்று பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்