காஷ்மீர் தொடர்பான சீனா-பாகிஸ்தான் கூட்டறிக்கை: நிராகரித்த இந்தியா..!

காஷ்மீர் தொடர்பான சீனா-பாகிஸ்தான் நாடுகளின் கூட்டறிக்கையை இந்தியா நிராகரித்தது

Update: 2022-11-03 22:16 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் சமீபத்திய சீன பயணத்தின்போது இரு நாடுகளும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் காஷ்மீர் குறித்தும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது, காஷ்மீர் பிரச்சிைனக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் உள்ளிட்டவை அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ள இந்தியா, சீனா-பாகிஸ்தான் கூட்டறிக்கையை நிராகரித்து விட்டது. இந்த அறிக்கை தேைவயற்றது எனக்கூறியுள்ள வெளியுறவு அமைச்சகம், இதுபோன்ற அறிக்கைகளை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 'காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாக எப்போதும் இருக்கும்' என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்