டெல்லியில் 118-வது சிந்து நதி நீர் ஆணைய கூட்டம்: இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை

நிரந்தர சிந்து ஆணையத்தின் 118-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது

Update: 2022-05-30 19:09 GMT

டெல்லி,

1960- இல் இந்தியா- பாகிஸ்தான் இடையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகிய கிழக்கில் உள்ள ஆறுகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 33 மில்லியன் அடி அளவுள்ள நீரினை இந்தியாவிற்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும்.

மேற்கு நோக்கி பாயும் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய ஆறுகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 135 MAF அளவுள்ள நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின்படி குறைந்த சேமிப்பகத்துடன் மேற்கு நதிகளில் நதி ஆலைகளை உருவாக்க இந்தியா அனுமதிக்கப்படுகிறது.

அதன்அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது, நீர் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய, இரு நாட்டிலும், சிந்து நதி நீர் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இரு நாட்டின் ஆணையங்களும், ஆண்டிற்கு ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில், ஆணையத்தின் 118-வது கூட்டம் டெல்லியில் மே 30,31 ஆகிய நாட்களில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்திற்கு பாகிஸ்தான் சாா்பில் சையது முகமது மெஹர் அலி ஷா தலைமையில் 5 போ் பங்றே்றனா். இந்த கூட்டத்தில் நதிநீா் பங்கீடு தொடா்பான பிரச்சனை, மேற்கில் பாயும் ஆறுகளில் இந்தியாவால் கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்