இந்தியா கூட்டணி: ஆலோசனை கூட்டத்திற்கான அட்டவணை வெளியீடு

இந்த கூட்டணியின் 3-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் மும்பையில் நடைபெற உள்ளது.

Update: 2023-08-30 07:30 GMT

கோப்புக்காட்சி

புதுடெல்லி,

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகின்றன. பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி நிறுத்தப்படுகிறார். ஆனால் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. இந்த சூழலில், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்பட 16 கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன.

இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த கூட்டணியின் 3-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் மும்பையில் நடைபெற உள்ளது. இதில் 16 கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தநிலையில், ஆலோசனை கூட்டத்திற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது எனவும் செப்டம்பர் 1-ம் தேதி காலை 10.30 மணிக்கு இந்தியா கூட்டணியின் லோகோ வெளியிடப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 1-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு இந்தியா கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்