2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இந்தியாவில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்படும்: பிரதமர் மோடி உரை
2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் இலக்கை அடைய இளைஞர்களும் பங்காற்றி வருகின்றனர் என பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
பிரதமர் மோடி அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் 102-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நடந்தது. இதில் பிரதமர் மோடி மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.
அவர் உரையாற்றும்போது, உத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில், அழிந்த நதி ஒன்றை மக்கள் மீட்டு புத்துயிர் பெற செய்து உள்ளனர். அந்த நதியின் பிறப்பிடமும் அமிர்த சரோவராக வளர்ச்சி பெற்று உள்ளது.
பெரிய இலக்குகளாக இருந்தபோதும், கடினம் வாய்ந்த சவாலாக இருந்தபோதும், இந்திய மக்களின் கூட்டு சக்தியானது, கூட்டு ஆற்றலானது, ஒவ்வொரு சவாலையும் தீர்க்கும் என அவர் கூறியுள்ளார்.
2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பது என இந்தியா இலக்கு நிர்ணயித்து உள்ளது. காசநோய்க்கு எதிராக நி-ஷய மித்ரா என்ற திட்டம் செயல்படுகிறது. கிராமப்புறங்களில் காசநோய் பாதித்த நோயாளிகளை ஆயிரக்கணக்கானோர் தத்தெடுத்து உள்ளனர்.
இதுவே இந்தியாவின் உண்மையான வலிமை. 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் இலக்கை அடைய இளைஞர்களும் பங்காற்றி வருகின்றனர் என பிரதமர் மோடி பேசும்போது கூறியுள்ளார்.