மேற்கு வங்காளத்தில் வருமானவரி சோதனை: பல்வேறு நிறுவனங்களில் ரூ.11 கோடி பறிமுதல்

மேற்கு வங்காளத்தில் பல்வேறு நிறுவனங்களில் வருமானவரி சோதனை நடத்தினர்.

Update: 2023-01-13 00:40 GMT

டெல்லி,

மத்திய வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு மேற்கு வங்காளத்தில் பல நிறுவனங்களில், கணக்கில் வராத பணப்பரிவர்த்தனை நடப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து கொல்கத்தா, முர்சிதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பீடி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் 24-க்கும் அதிகமான இடங்களில் நேற்று முன்தினம் முதல் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், தொழில் அதிபருமான ஜாகிர் உசைன் நிறுவனமும் அடங்கும்.

Tags:    

மேலும் செய்திகள்