அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நிலையான வளர்ச்சியே மத்திய அரசின் கொள்கை - பிரதமர் மோடி
அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நிலையான வளர்ச்சியே மத்திய அரசின் கொள்கை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
கோவாவில் நடந்த ஜி20 எரிசக்திதுறை அமைச்சர்கள் மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது,
கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கி உள்ளோம். நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு சேர்த்துள்ளோம்.
அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நிலையான வளர்ச்சியே மத்திய அரசின் கொள்கை.
இவ்வாறு அவர் கூறினார்.