வாலிபர் கொலையில் 6 பேர் கைது
வாலிபர் கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு: கலபுரகி மாவட்டம் காலகி தாலுகா அரனகல் தாண்டா கிராமத்தில் வசித்து வந்தவர் ஆனந்த் சவுகான் (வயது 25). இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து இருந்தனர். இதுகுறித்து காலகி போலீசார் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் ஆனந்த்தை கொலை செய்ததாக அரனகல் தாண்டா கிராமத்தை சேர்ந்த அரவிந்த், சச்சின், சுமித் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். முன்விரோதத்தில் ஆனந்த்தை தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது. தலைமறைவாக உள்ள 7 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.