தட்சிண கன்னடா மாவட்டத்தில், மணல் தட்டுப்பாடு இல்லை; கலெக்டர் ராஜேந்திரா தகவல்

தட்சிண கன்னட மாவட்ட கலெக்டர் கே.வி.ராஜேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

Update: 2022-05-25 16:13 GMT

மங்களூரு;


மங்களூரு அருகே பணம்பூர் கடற்கரை அரசின் நிதி உதவி மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் வந்து கண்டு களித்து செல்வதுடன் மீண்டும் வரத்தூண்டும் அளவிற்கு பணம்பூர் கடற்கரையை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் கடற்கரைப பகுதிகளில் கடைகள் அமைத்து அதை வாடகைக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற 27, 28, 29-ந் தேதி ஆகிய 3 நாட்கள் சுற்றுலாத்துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.


இதற்கு அடுத்தப்படியாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் மணம் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. தேவையான அளவு மணல் கையிருப்பு உள்ளது. வீடு கட்டுவதற்கு மற்றும் பல்வேறு தேவைகளுக்கு மணல் பயன்படுத்தப்படுவதால் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொண்டுள்ளோம். தேவைப்படும் மக்கள் உரிய கட்டணம் செலுத்தி மணலை பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்