தரிகெரே டவுனில் மட்கா சூதாட்டம்; வாலிபர் சிக்கினார்

தரிகெரே டவுனில் மட்கா சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-30 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே டவுன் எம்.ஜி. ரோடு பகுதியில் மட்கா சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அந்தப்பகுதியில் நின்ற வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினார். அவரை போலீசார் துரத்தி சென்று பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர் அதேப்பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது35) என்பதும், அவர் அப்பகுதியில் மட்கா சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தரிகெரே டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்