குடகில் போதைப்பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது

குடகில் போதைப்பொருள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-15 18:45 GMT

குடகு-

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட அம்மாட்டி சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடந்து வந்தது. இது குறித்து விராஜ்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் விராஜ்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2 பேர் துணிப்பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார், 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து சந்தேகம் வலுக்கவே அவர்களின் கையில் இருந்த பையை வாங்கி பார்த்தனர்.

அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரிடம் இருந்து 294 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் விராஜ்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சித்தாபுரா நகரை சேர்ந்த அபி (வயது 22), விராஜ்பேட்டை சுண்ணாம்பு தெருவை சேர்ந்த சூர்யா (21) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது விராஜ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்