இந்தியாவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாடு: புதினுக்கு பதிலாக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி பங்கேற்கிறார்
ரஷியாவின் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் பங்கேற்க உள்ளார்.
புதுடெல்லி,
ஜி 20 நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாடு அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் அங் கம் வகிக்கும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர். அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட உள்ளது.
ஜி 20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், ரஷியாவின் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய புதின்,
ஜி 20 உச்சி மாநாட்டில் தான் பங்கேற்க இயலாத சூழல் நிலவுவது பற்றி குறிப்பிட்டார். அப்போது ரஷியா, இந்தியாவுக்கு அளித்த ஆதரவுக்கு தனது நன்றியை புதினுக்கு பிரதமர் மோடி தெரிவித்துக் கொண்டார்.