எத்தினஒலே குடிநீர் திட்ட முறைகேட்டை அம்பலபடுத்துவேன்; குமாரசாமி பேட்டி
எத்தினஒலே குடிநீர் திட்டத்தில் நடந்த முறைகேட்டை சந்தர்ப்பம் பார்த்து அம்பல படுத்துவேன் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்;
குமாரசாமி பேட்டி
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, கோலாரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-கோலார், மாலூர், பங்காருபேட்டை ஆகிய தாலுகாக்களுக்கு குடிநீர் பிரச்சினையை போக்க எரகோள் திட்டத்தை கொண்டு வந்தது நான் தான். ஆனால் ரமேஷ்குமார் எரகோள் திட்டத்தை தான் ஏற்படுத்தியதாக செல்லும் இடமெல்லாம் கூறி நீலிகண்ணீர் வடிக்கிறார்.
இதனை கோலார் நகர மக்கள் யாரும் நம்பமாட்டார்கள் என்பதை அவர் முதலில் உணரவேண்டும். ரமேஷ்குமார், கோலார் மாவட்டத்திற்கு எவ்வளவு அநீதி செய்துள்ளார் என்பது எனது கண்முன்னே இன்னும் உள்ளது. அதை மாவட்ட மக்களும் நன்கு அறிவார்கள்.
எத்தினஒலே திட்டத்தில் முறைகேடு
காங்கிரஸ் ஆட்சியில் எத்தினஒலே குடிநீர் திட்டத்திற்கு எவ்வளவு நீதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் எவ்வளவு முறைகேடு நடத்தது என்பது குறித்து சந்தர்ப்பம் வரும்போது மக்களிடம் எடுத்துக்கூறுவேன்.
எத்தினஒலே குடிநீர் திட்டம் தொடங்கி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன. அந்த திட்டத்திற்கு தேவையான நிதியை விட கூடுதல் நிதி பல கோடி ஒதுக்கியும் இன்னும் கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, பெங்களூரு புறநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகிக்காதது ஏன்?.
மனநலம் பாதித்தவர்
எத்தினஒலே குடிநீர் திட்டத்தில் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் ஊழல் செய்தார். ஊழலை தட்டிக்கேட்பவர்களை, ரமேஷ்குமார் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுவதுடன் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்கிறார்.
மனநலம் பாதித்தவர்போல் செயல்படும் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறவேண்டியவர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.