போலி பாஸ்போர்ட்டு தயாரித்து மனித கடத்தல்; வங்காளதேசத்தை சேர்ந்த நபர் கைது..!

போலி பாஸ்போர்ட் தயாரித்து கொச்சி விமான நிலையம் வழியாக மனிதக்கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர் .

Update: 2022-09-06 11:12 GMT

கேரளா:

வங்காளதேசம், சிற்றகாக் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அப்துல் சுக்கூர், (வயது 32 ). இவர் கொச்சி பன்னாட்டு விமான நிலையம் வழியாக போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்து கொடுத்து மனித கடத்தல் நடத்தியதாக ஆலுவா ரூரல் எஸ்.பி. விவேக்குமாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

4 பேர் கைது

இதனை அடுத்து அவனது நடவடிக்கைகளை கண்காணிக்க, தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாகவே போலி பாஸ்போட்டுகளை தயாரித்து கொடுத்து வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கும் இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கும் மனித கடத்தல் நடத்தியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

கடந்த மாதம் 27ஆம் தேதி நெடும்பாசேரி உள்ள கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இந்திய பிரஜைகள் என்ற பெயரில் வங்கதேசத்துக்கு கடக்க முயன்ற நான்கு நபர்களை விமான நிலைய குடியுரிமை துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் பிடித்து வைத்து விசாரித்தனர்.

போலி பாஸ்போர்ட்-மனித கடத்தல்

அப்போது இவர்கள் நான்கு பேரும் போலி பெயர்களில், போலி பாஸ்போர்ட்டில், வளைகுடா நாடான ஷார்ஜா வழியாக வங்கதேசத்துக்கு செல்ல முயன்றது தெரிய வந்தது. முகமது அப்துல் சுக்கூர் என்ற நபர் இதுபோன்ற போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்து அளித்ததாக விசாரணையில் அவர்கள் தெரிவித்தனர்.

போலி பாஸ்போர்ட்டுகள், போலியான ஆதார் கார்டு, போலி பான் கார்டு, வங்கி கணக்குகள் ஆகியவை இவர் தயாரித்ததாகவும் தெரியவந்தது.

கைது

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் முகமது அப்துல் சுக்கூர் குறித்துள்ள தகவல்கள் வெளியானது. தொடர்ந்து இவனை கண்காணித்த போலீசார் இவன் மங்களூருக்கு விமானத்தில் செல்வது அறிந்து அங்கு அவனை பின் தொடர்ந்து சென்று இவனை கைது செய்தனர்.

கைதான நபர் ஆலுவா அழைத்துவரப்பட்டு, ஆலுவா முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் ரிமாண்ட் செய்யப்பட்டார். இவரிடம் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் இது வரை இதுபோன்று எத்தனை நபர்களை இந்தியாவுக்குள் அழைத்து வந்ததுள்ளார் என்பது குறித்தும் தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்