வீடு புகுந்து ரூ.9½ லட்சம் நகை-பணம் திருட்டு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு

சித்ரதுர்கா அருகே வீடு புகுந்து ரூ.9½ லட்சம் நகை-பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-10-09 18:45 GMT

சிக்கமகளூரு,;


சித்ரதுர்கா டவுன் விசுவேஸ்வரா அருகே உள்ள பரங்கி பகுதியில் வசித்து வருபவர் பசவனகவுடா. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். அப்போது மா்மநபர்கள் சிலர் அவரது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த பசவனகவுடா, கதவின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு உள்ேள சென்று பார்த்துள்ளார்.

அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.9.10 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப்போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனே சித்ரதுர்கா கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிவாகி இருந்த திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்