அரியானா: டி.எஸ்.பி மீது லாரியை ஏற்றி படுகொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!

இந்த கொடூரத்தை நிகழ்த்திவிட்டு தப்பியோடிய நபர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-21 03:37 GMT

சண்டிகர்,

தலைநகர் புதுடெல்லியை ஒட்டி அமைந்துள்ள அரியானா மாநிலத்தில், சுரங்க மாபியா கும்பல் ஒன்று பட்டப்பகலில், ஒரு மூத்த போலீஸ் அதிகாரி மீது லாரியை ஏற்றி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகில் உள்ள பச்கான் என்ற இடத்தில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி சுரேந்திர சிங் பிஷ்னோய்க்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் போலீஸ் குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றார்.

போலீசாரை கண்டதும், சட்டவிரோத சுரங்கத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது அந்த அதிகாரி நடுவழியில் நின்றுகொண்டு, கல் ஏற்றி சென்ற வாகனங்களை நிறுத்துமாறு சைகை காட்டினார்.

ஆனால் அதில் ஒரு லாரியின் டிரைவர் அவர் மீது லாரியை ஏற்றினார். இதில் அந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். ஏனைய சில போலீசார் படுகாயமடைந்தனர்.இந்த கொடூரத்தை நிகழ்த்திவிட்டு தப்பியோடிய நபர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அரியானா டி.எஸ்.பியை லாரி ஏற்றி கொன்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.

இதுகுறித்து போலீஸ் எஸ்.பி வருண் சிங்ளா கூறுகையில், "குற்றம்சாட்டப்பட்ட அந்த நபரை பிடிக்க சுமார் 30 இடங்களில் ரெய்டு நடத்தினோம். அவன் திரும்பத் திரும்ப தான் தங்கியிருக்கும் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டிருந்தான். அவனை போலீஸ் காவலில் வைத்து விசாரணை செய்வோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்