குஜராத்: தனியார் விமான தயாரிப்பு நிறுவனத்தின் அடிக்கல்லை நாட்டினார் பிரதமர் மோடி

குஜராத்தில் தனியார் விமான தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அதற்கான அடிக்கல்லை இன்று நாட்டியுள்ளார்.

Update: 2022-10-30 10:50 GMT



வதோதரா,


குஜராத்தின் வதோதரா நகரில் இந்திய விமான படைக்கான விமானங்களை தயாரித்து வழங்கும் திறன் கொண்ட தனியார் நிறுவனத்தின் தொடக்க விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசை வழங்கி கவுரவம் அளித்தனர். நிகழ்ச்சியில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் கலந்து கொண்டார்.

இதன்படி, சி-295 விமானங்களை டாடா-ஏர்பஸ் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

40 விமானங்கள் தவிர்த்து, இந்த உற்பத்தி மையத்தில் விமான படைக்கு தேவையான மற்றும் ஏற்றுமதிக்கான கூடுதல் விமானங்களும் தயாரிக்கப்படும் என பாதுகாப்பு செயலர் அரமானே கிரிதர் இன்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்