திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு - நிர்மலா சீதாராமன்

டெல்லியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது

Update: 2023-07-11 17:02 GMT

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும் என கூறிய அவர் செயற்கை ஜரிகைக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில் இனி 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கப்பட்ட பருத்திக்கு பழைய ஜிஎஸ்டி வரி பாக்கி ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி 18%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்