ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட கோபலகிருஷ்ண காந்தியும் மறுப்பு

ஏற்கனவே சரத் பவார், பரூக் அப்துல்லா ஆகியோர் போட்டியிட மறுத்த நிலையில் கோபாலகிருஷ்ண காந்தியும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-20 10:12 GMT

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், 17 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து, தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அவரும் தான் போட்டியிடப் போவது இல்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து, மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்காள மாநில முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிட வைக்கலாமா? என்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்துவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், கோபாலகிருஷ்ண காந்தியும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட மறுப்பு தெரிவித்துவிட்டார்.

அனைத்து கட்சிகள் இடையேயும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வேட்பாளர் ஒருவரை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும் எனவும் தனது பெயரை பரிசீலித்தற்கு நன்றிக்கடன் பட்டு இருப்பதாகவும் கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்