மத்திய கல்வி மந்திரியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானத்தில் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆலோசித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் , மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்துள்ளார். நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.