'வலுவான போராட்டத்திற்கு தயாராகுங்கள்' - பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

எதிர்கட்சிகளுக்கு எதிரான வலுவான போராட்டத்திற்கு தயாராகுமாறு பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2023-03-28 16:23 GMT

புதுடெல்லி,

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் மற்றும் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு, 3 மாநில தேர்தல் வெற்றியின் அடையாளமாக மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பா.ஜ.க. எந்த அளவிற்கு வெற்றியை சுவைக்கிறதோ அதே அளவிற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து தாக்குதலும் வரும் எனவும், எதிர்கட்சிகளுக்கு எதிரான வலுவான போராட்டத்திற்கு தயாராகுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில் சமூக நீதி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி, ஏப்ரல் 6 முதல் 14-ந்தேதி வரை நாடு முழுவதும் சமூக நீதி வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளதாக கூறினார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்