அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்: அந்தமான் முன்னாள் தலைமைச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

அந்தமான் முன்னாள் தலைமைச் செயலாளரின் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

Update: 2022-11-10 14:24 GMT

போர்ட் பிளேர்,

அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரேன் பதவிக் காலத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்களை தனது இல்லத்துக்கு அழைத்து சென்றதாகவும். அவர்களில் சிலருக்கு பாலியல் ஆதாயத்திற்கு பதிலாக வேலையும் வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக 21 வயது பெண் ஒருவர் புகார் அளித்து உள்ளார். நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர்.எல். ரிஷி ஆகியோர் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக போலீசார் கடந்த மாதம்1-ந் தேதி, தலைமைச்செயலாளர் ஜிதேந்திர நரைன், தொழிலாளர் நல கமிஷனர் ரிஷி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஓட்டல் அதிபரும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம் 18-ந் தேதியன்று, அந்தமான் நிகோபார் உயர் போலீஸ் அதிகாரிகள் குழு, போர்ட் பிளேரில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர் இடைக்கால ஜாமீன் கேட்டு, டெல்லி ஐகோர்ட்டை நாடினார். அங்கு அக்டோபர் 28-ந் தேதி வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கூட்டு பலாத்கார வழக்கில் அந்தமான் மற்றும் நிகோபார் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரேன் முன்ஜாமீன் மனுவை உள்ளூர் செஷன்ஸ் கோர்ட்டு நிராகரித்துள்ளது. தீர்ப்பு வெளியான உடனேயே, ஒரு போலீஸ் குழு நரேன் தங்கியிருந்த தனியார் ரிசார்ட்டுக்கு வந்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவரை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்