டீன்-ஏஜ் சிறுவனின் காலை முத்தமிட வாலிபரை கட்டாயப்படுத்திய கும்பல்; அதிர்ச்சி பின்னணி...!!

மத்திய பிரதேசத்தில் பழி வாங்கும் செயலாக வாலிபரை கட்டாயப்படுத்தி டீன்-ஏஜ் சிறுவனின் காலை முத்தமிட செய்தது தெரிய வந்து உள்ளது.

Update: 2023-07-09 02:45 GMT

போபால்,

மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் ஓடும் கார் ஒன்றில் வாலிபர் ஒருவரை அடித்து, கட்டாயப்படுத்தி டீன்-ஏஜ் சிறுவனின் காலை வாலிபர் முத்தமிட செய்த வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய வீடியோவில், மொஹ்சின் என்ற மந்திரி கான என்பவர் காரில் பயணிக்கிறார். அவருடன் 3 பேர் மற்றும் ஒரு மைனர் சிறுவன் (வயது 17) பயணம் செய்கின்றனர்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து வாலிபர் மொஹ்சினை அடிக்கின்றனர். அந்த 3 பேரும் கட்டாயப்படுத்தி, வாலிபரை 17 வயது சிறுவனின் காலை முத்தமிட செய்கின்றனர்.

இந்த வீடியோ வைரலானது. இதுபற்றி போலீசார் கூறும்போது, இது ஒரு பழி வாங்கும் செயலாக இருக்க கூடும் என தெரிவித்து உள்ளனர்.

மொஹ்சின், அவரது நண்பர்கள் லாலா பண்டிட், வன்ஷ் பதக் ஆகியோர் கடந்த மே 21-ந்தேதி தப்ரா பகுதியில் வைத்து சேத்தன் சர்மாவை அடித்து, தாக்கி உள்ளனர்.

இதுபற்றி அடுத்த நாள் போலீசில் மொஹ்சின் மற்றும் அவரது நண்பர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, கடந்த ஜூன் 23-ந்தேதி மொஹ்சின் கடத்தப்பட்டு உள்ளார். இதன்பின்னரே, அந்த மைனர் சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் மொஹ்சினை துன்புறுத்தி உள்ளனர்.

அதற்கு முன்பு, மொஹ்சினின் நண்பரான கரணை கடத்தி சென்று, அவரை வைத்து மொஹ்சினை வரவழைத்து உள்ளனர்.

அவர்கள் இருவரையும் காருக்குள் வைத்து கடுமையாக அடித்து உள்ளனர். காருக்குள் சட்டவிரோத ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன என மொஹ்சின் கூறியுள்ளார்.

சில கி.மீ. கடந்த பின்னர் இரண்டு பேரும் காரில் இருந்து தப்பி சென்று உள்ளனர். மொஹ்சின் மீது மைனர் சிறுவன் மற்றும் அவரது நண்பரை தாக்கிய வழக்கு மற்றும் கலால் துறை சார்ந்த வழக்கு ஒன்றும் என 2 வழக்குகள் உள்ளன.

இதில், கலால் துறை தொடர்புடைய வழக்கில் மொஹ்சினின் பெயர் மந்திரி கான் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்