நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்...!
நாடு முழுவதும் இந்து மத பண்டிகையான விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுடெல்லி,
இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமான பண்டிகையாகும். இந்து மத கடவுள் விநாயகர் பிறந்த தினமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. விநாயகர் கோவில்களில் பக்தர்கள் குவிந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். குறிப்பாக, மராட்டிய மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் உள்பட பல்வேறு பிரபல விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.