பண்ட்வாலில் இருந்து பெங்களூருவுக்கு லாரியில் கடத்திய 15 டன் அரிசி பறிமுதல்

பண்ட்வாலில் இருந்து பெங்களூருவுக்கு லாரியில் கடத்திய 15 டன் அரிசியை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2023-04-03 06:45 GMT

மங்களூரு-

பண்ட்வாலில் இருந்து பெங்களூருவுக்கு லாரியில் கடத்திய 15 டன் அரிசியை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

வாகன சோதனை

கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந்தேதி நடக்க உள்ளது. இதனால் பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரங்கிபேட்டை பகுதியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது லாரியில் மூட்டை, மூட்டையாக அரிசி இருந்தது. இதுகுறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால், அரிசிக்கான எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை.

15 டன் அரிசி பறிமுதல்

மேலும், பண்ட்வாலில் இருந்து பெங்களூருவுக்கு அந்த அரிசியை அவர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெங்களூரு நெலமங்களாவை சேர்ந்த சுனில் என்பது தெரியவந்தது.

மேலும் லாரியில் இருந்த 50 கிலோ எடை கொண்ட 300 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது. அதாவது மொத்தம் 15 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். அரிசியை கடத்தி வந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பண்ட்வால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்