தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு இலவச தங்கும் மையம் - கேரளா அரசு அறிவிப்பு

தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்கும் வகையில், இலவச தங்கும் மையம் அமைக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-10-01 11:06 GMT


கேரளாவில் முக்கிய நகரங்களில் தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்கும் வகையில், இலவச தங்கும் மையம் அமைக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், முக்கிய நகரங்களில் 'மையம் எனது கூடு' என்ற பெயரில் அரசு மையம் அமைக்கப்படும் என்றார்.

இந்த மையங்களில் இரவு 8 மணிக்குள் வரும் பெண்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும், அதிகபட்சமாக 3 நாட்கள் வரை பெண்கள் தங்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும், ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்