போலி பணி ஆணை வழங்கி வாலிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கர்நாடக பால் கூட்டமைப்பில் வேலைக்கு சேர போலி பணி ஆணை வழங்கி வாலிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த இடைத்தரகரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-01-22 21:14 GMT

பெங்களூரு:-

கர்நாடக பால் கூட்டமைப்பு சங்கத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கான எழுத்து தேர்வு அண்மையில் நடைபெற்றது. இந்த நிலையில் சந்திரன் என்ற வாலிபர் ஒருவர், பால் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு வந்தார். அவர் பணி ஆணை ஒன்றை அங்கிருந்த அதிகாரியான லோகேசிடம் கொடுத்தார். அதில் விதான சவுதா செயலாளர் பெயரில் கையெழுத்திடப்பட்டு இருந்தது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் லோகேஷ் உடனடியாக ஆடுகோடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சந்திரனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அது போலியான பணி ஆணை என்பது தெரிந்தது.

மேலும் சந்திரனுக்கு, பிரகாஷ் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் ஆகி உள்ளார். அவர் தனக்கு விதான சவுதாவில் செல்வாக்கு உள்ளதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூ.20 லட்சத்தையும் பெற்று மோசடி செய்தது தெரிந்தது. இதேபோல் அவர் இடைத்தரகராக செயல்பட்டு பலரிடம் அரசு வேலை தருவதாக மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும், அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்