பா.ஜ.க.வில் இணைந்தார் பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி

பிஜு ஜனதா தளத்தில் இருந்து விலகிய சுஜித் குமார் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

Update: 2024-09-06 11:54 GMT

புதுடெல்லி,

ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி மாநிலங்களவை எம்.பி. சுஜித் குமாரை கட்சியில் இருந்து நீக்கி கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுஜித் குமார், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரிடம் அவர் கொடுத்தார். இதனை தொடர்ந்து, அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாநிலங்களவை செயலகம் இன்று அறிவித்தது.

இந்த நிலையில், எம்.பி. பதவியை ராஜினாமா செய்த சுஜித் குமார் இன்று டெல்லியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மம்தா மோகந்தா பிஜு ஜனதா தளத்தில் இருந்து விலகிய ஒரு மாதத்திலேயே மற்றொரு எம்.பி.யான சுஜீத் குமாரும் கட்சியிலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்