ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.100 நிர்ணயிக்க அரசுக்கு கோரிக்கை

கர்நாடகத்தில் ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.100 நிர்ணயிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-30 21:44 GMT

பெங்களூரு: பெங்களூருவில் ஓலா, ஊபர் ஆட்டோக்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பயணிகளிடம் கட்டணம் வசூலித்து வந்தது. இதையடுத்து, பெங்களூருவில் ஓலா, ஊபர் ஆட்டோக்கள் இயக்குவதற்கு போக்குவரத்து துறை தடை விதித்தது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு விதித்த தடையை ரத்து செய்ததுடன், கட்டணம் நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து, போக்குவரத்து துறை அதிகாரிகள், ஓலா, ஊபர் ஆட்டோக்களின் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

அதாவது அந்த ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.100 நிர்ணயிக்க வேண்டும் என்று ஓலா, ஊபர் ஆட்டோக்கள் நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் கட்டண நிர்ணயம் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதால், வருகிற 7-ந்தேதி ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் குறித்த இறுதி பட்டியலை ஐகோர்ட்டிலேயே தாக்கல் செய்ய போக்குவரத்து துறை தீர்மானித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்