பாஜக-வை பொறுத்தவரை, ஒற்றுமை யாத்திரை செல்லும் இடங்களில் மட்டும் கொரோனா உள்ளது- ராகுல் காந்தி தாக்கு

கொரோனா மீண்டும் பரவுவதால் எனது பாத யாத்திரையை நிறுத்தவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறியிருந்தார்.

Update: 2022-12-23 17:12 GMT

கோப்புப்படம் 

பரிதாபாத்,

அரியானா மாநிலம் பரிதாபாத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

மத்திய சுகாதாரத்துறை மந்திரி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், கொரோனா மீண்டும் பரவுவதால் எனது பாத யாத்திரையை நிறுத்தவேண்டும் என கூறியிருக்கிறார்.

மற்ற இடங்களில் பாஜகவினர் அவர்கள் விரும்பியபடி பொதுக்கூட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் இந்திய ஒற்றுமை பயணம் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் கொரோனா பரவுமாம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக அரசை கடுமையாக சாடினார். இந்திய ஒற்றுமை பயணம் குறித்து அவதூறு பரப்பவும், யாத்திரையை தடம் புரளச் செய்வதற்கும் அரசாங்கம் கொரோனா நாடகத்தை திட்டமிட்டு நடத்துவதாக குற்றம் சாட்டினார். அத்துடன், அறிவியல்பூர்வ ஆலோசனையின் அடிப்படையிலான நெறிமுறைகளை காங்கிரஸ் கட்சி பின்பற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால், யாத்திரையை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்