டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

எய்ம்ஸ் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இருக்கக்கூடிய இயக்குநர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-01-04 05:23 GMT

புதுடெல்லி,

டெல்லி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த தகவலை தொடர்ந்து விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து டெல்லி தீயணைப்புத்துறை இயக்குநர் அதுல் கார்க் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

" இன்று காலை 5 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள இயக்குநர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 7 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைத்தனர்.

அலுவலகத்தில் இருந்த கோப்புகள், மேஜைகள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை " என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்