கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை
தார்வாரில் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.;
உப்பள்ளி:
தார்வாா் தாலுகா மனசூர் கிராமத்ைத சேர்ந்தவர் மல்லப்பா (வயது 26). விவசாயி. இவா் தனக்கு சொந்தமான 2 ஏக்கா் நிலத்தில் விவசாயம் செய்வதற்காக ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தார். ஆனால் தொடர் கனமழை காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டதால், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் மல்லப்பா அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள், பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மல்லப்பா, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.