'வந்தே பாரத்' உள்ளிட்ட ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளுக்கான கட்டணம் குறைப்பு - ரெயில்வே வாரியம் அறிவிப்பு

ஏ.சி. சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் 25% வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-07-08 14:51 IST

புதுடெல்லி,

இந்தியாவில் பல்வேறு மாநில வழித்தடங்களில் 'வந்தே பாரத்' ரெயில் இயக்கம் தொடங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வந்தே பாரத் ரெயில்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 'வந்தே பாரத்' உள்ளிட்ட சில ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளுக்கான கட்டணம் குறைக்கப்படுவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி ஏ.சி. சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் 25% வரை குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 50 சதவீதத்திற்கும் குறைவானோர் பயணிக்கும் ரெயில்களில் கட்டண சலுகையை வழங்கவும் ரெயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்