போதைப்பொருட்களை பயன்படுத்தி வழக்கில் நடிகை ரகுல் பிரீத்சிங்கிற்கு அமலாக்கத்துறை நோட்டீசு

போதைப்பொருட்களை பயன்படுத்தி வழக்கில் நடிகை ரகுல் பிரீத்சிங் உள்பட 2 பேருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2022-12-16 21:08 GMT

பெங்களூரு:-

பெங்களூருவில் கோவிந்தபுரம் போலீஸ் எல்லைக்கு பகுதியில் தனியார் விடுதியில் மதுவிருந்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த விருந்தில் தெலங்கானாவை சேர்ந்த எம்.எல்.எ. ரோகித் ரேட்டி, நடிகை ரகுல் பிரித்சிங், நடிகர் சங்கர் கவுடா, தனிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுதொடர்பான தகவலின்பேரில் கோவிந்தபுரம் போலீசார் விருந்து நடைபெற்ற இடத்திற்கு சென்று அங்கு போதைப்பொருட்கள் பயன்படுத்திய சங்கர் கவுடாவை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மதுவிருந்திற்காக ரூ.4 கோடி செலவு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தெலங்கானா எம்.எல்.ஏ. மற்றும் நடிகை ரகுல் பிரித்சிங் ஆகியோர் மீது அமலாக்கத்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர்கள் 2 பேருக்கும் அமலாக்கத்துறை சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்ஆவார்கள் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்