பா.ஜனதாவின் மதக்கலவர அரசியலால் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு; காங்கிரஸ் விமர்சனம்

பா.ஜனதாவின் மதக்கலவர அரசியலால் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

Update: 2022-08-23 20:26 GMT

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சிவமொக்காவில் கடந்த 8 மாதங்களில் 3 கலவரங்கள் நடந்துள்ளன. இது போலீஸ் மந்திரியின் சொந்த மாவட்டம். இது போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவின் பொறுப்பற்றத்தனமா? அல்லது உள்நோக்கத்துடன் செயல்படுவதை காட்டுகிறதா?. சொந்த மாவட்டத்திலேயே சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முடியாதவர், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவது சாத்தியமா?.

பா.ஜனதாவின் மதக்கலவர அரசியல், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் அரசின் தோல்வி போன்றவற்றால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 40 சதவீத கமிஷன் பணத்தை கொண்டு பா.ஜனதாவினர் சாப்பிடுகிறார்கள். அத்தகையவர்கள், வேறு சிலர் தங்களுக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிட்டால் அது அவர்களுக்கு பிடிக்காது.

இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்