லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு
நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
லடாக்,
லடாக் யூனியன் பிரதேசத்தின் கார்கில் பகுதியில் இன்றிரவு 9.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் மற்றும் பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.