புது வருட தொடக்கத்தின் முதல் நாளில் அரியானா, வங்காள விரிகுடா பகுதியில் நிலநடுக்கம்

அரியானா, வங்காள விரிகுடா பகுதியில் புது வருட தொடக்கத்தின் முதல் நாளில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2023-01-01 08:55 GMT



புதுடெல்லி,


வங்காள விரிகுடா பகுதியில் இன்று காலை 10.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 36 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதேபோன்று அரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் இருந்து வடக்கு வடமேற்கு பகுதியில் இன்று அதிகாலை 1.19 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. புது வருட தொடக்கத்தின் முதல் நாளில், அரியானா மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்