விடுதியில் இடம் கிடைக்காததால் தார்வாரில் மாணவ-மாணவிகள் போராட்டம்

தார்வாரில் விடுதியில் இடம் கிடைக்காததால் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-30 19:00 GMT

உப்பள்ளி;

தார்வாரில் உள்ள அம்பேத்கர் விடுதியில் மாவட்ட கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் மூலம் இடஒதுக்கீடு நடந்தது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு விடுதியில் இடம் கேட்டு விண்ணப்பித்தனர்.

ஆனால், அதில் 200 மாணவர்களுக்கு மட்டும் இடம் ஒதுக்கி மாநில அரசு அறிவித்தது. மற்ற மாணவ-மாணவிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதனால் விரக்தி அடைந்த, இடம் கிடைக்காத மாணவ-மாணவிகள் தார்வாரில் உள்ள அம்பேத்கர் பவன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் செய்திகள்