2 ஏவுகணை சோதனைகள் வெற்றி: குறுகிய தூர வான் எல்லையை தாக்கும்

குறுகிய தூர வான் எல்லையை தாக்கும் இரண்டு ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

Update: 2023-03-14 23:22 GMT

புதுடெல்லி,

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) நேற்று அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்து சாதனை படைத்தது. ஒடிசாவின் கடற்கரை நகரான சந்திபூரில் இந்த சோதனை நடந்தது. நேற்று சோதிக்கப்பட்ட இரு ஏவுகணைகளும், குறுகிய தூர வான் எல்லையை தாக்கி அழிக்கும் விசூரத்ஸ் வகை ஏவுகணைகளாகும்.

சிறிய ரக ஏவுகணையான இதை மனிதன் எங்கும் எடுத்துச் சென்று தரையில் நின்றபடி ஏவ முடியும். அதிவேக வான்வழி இலக்குகளை குறுகிய தூரத்திற்குள் எதிர்கொண்டு தாக்கி அழிக்க இத்தகைய ஏவுகணைகள் பயன்படும்.

இந்த ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்த டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள், தொழில்நுட்ப பணியாளர்களை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வெகுவாக பாராட்டினார். "புதுமை தொழில்நுட்பங்களை கொண்ட இதுபோன்ற ஏவுகணைகள் ஆயுதப்படைக்கு மேலும் ஊக்கம் அளிக்கும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்