3 மாநில தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிக்கிறது: காங்கிரஸ் கருத்து

3 மாநில தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2023-03-02 23:25 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

திரிபுராவில், வலிமையான கூட்டணி அமைத்ததால், ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்தோம். ஆனால், அந்த நம்பிக்கை நனவாகவில்லை.

மேலிட தலைவர்கள் பிரசாரம் செய்யாததால்தான், வடகிழக்கில் தோல்வி ஏற்பட்டதாக கூறுவது தவறு.

அதே சமயத்தில், பல மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் ஊக்கம் அளிக்கிறது. குறிப்பாக, மேற்கு வங்காள வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. மராட்டியத்தில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் வெற்றி பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் எங்கள் மூத்த தலைவர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்